1974 ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதிதான் நான் பிறந்தது. நான் பிறந்த போது ஒரு சிறிய குடிசை வீடு என்னுடைய அப்பா திரு. D . டேவிட் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி.
எனக்கு படிக்கும் பருவம் வந்தவுடன் என் வீட்டுக்கு அருகே உள்ள நர்கீஸ் பாலர் பள்ளியில் சேர்த்தார்கள்.
எனக்கு கொஞ்சம் செல்லம் அதிகமாகவே கொடுதார்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு. நான் பிறந்தவுடன் என்தந்தைக்கு LOTTERY டிக்கெட் வாங்கிய போது (சிரிக்க கூடாது) அதில் 1000 ரூபாய் பரிசு விழுந்தது. நான் மிகவும் ராசியானவன் என என் தந்தைக்கு நம்பிக்கை.
முதல் வகுப்பு நான் சேர்ந்த போது. அவர்கள் வைத்த தகுதி தேர்வில் நான் தோற்று போனேன். என்ன தேர்வு தெரியுமா என்னுடைய வலது கையால் தலையை சுற்றி இடது காதை தொடவேண்டும். எனக்கு என் காது எட்டவில்லை. இருந்தாலும் எனக்கு பள்ளியில் இடம் கிடைத்தது.
நான் கண்ட அறிவு சரஸ்வதி. நான் இன்று பேசும் பேச்சுக்கெல்லாம் என்னாவில் மொழியையும், எனக்கு அறிவு கடவுள் திருமதி.கமலா. இவர்தான் என் முதல் வகுப்பு ஆசிரியர். இரண்டு ஆண்டும் முதல் வகுப்பில் இவர் வகுப்பில்தான் படித்தேன்.
எனக்கு என் அப்பாதான் குருநாதர். சிறு வயதில் இருந்து எனக்கு அவர் மறைமுகமாக பொது அறிவை ஏற்றி கொண்டு இருந்தார் என்றே சொல்லலாம்.
அவர் தினந்தோறும் எனக்கு கொடுத்தது தினகரன் செய்தித்தாளைதான்
அப்பொழுது அதன் நிறுவனர் திரு. கே.பி. கந்தசாமி அவர்கள். அந்த செய்தி தாள் மட்டும் இல்லை என்றால் அன்று என் அரிச்சுவடி பிழையாக இருந்திற்கும் என்றே சொல்லலாம். என் தந்தைக்கு நன்றி.
சிறு வயதில் இருந்தே என் தந்தை எனக்கு என் ஆழ் மனதில் விதைத்த விதைதான் இன்று நீங்கள் அறியப்படும் இனியவன்.
எங்கள் பகுதியில் நடைபெறும் கட்சி நிகழ்சிகளுக்கு என்னை அழைத்து போவார். அப்போதெல்லாம் நான் நினைத்து பார்பேன். ஒரு மனிதன் பேசுகின்றான் எல்லோரும் கேட்கின்றார்கள், இப்படி ஒரு மனிதனால் அனைவரையும் தன் பால் ஈர்கமுடியுமா என்று.
எல்லாவற்றுக்கும் மேலே எனக்கு உரம் இட்டது நான் படித்த St. Peter's High School இன்று அது St. Peter's Higher Secondary School ஆக மாரி உள்ளது. அங்கு எனக்கு பாடம் நடத்திய என் தமிழ் ஆசிரியர்கள் அவர்களில் என்னை மிகவும் கவர்தவர்களில் புலவர். ஜெகதீசன் அய்யா அவர்கள். எந்த அளவு என்றால், அவர் பாடம் எடுக்கும் போது அவர் வாயில் இருந்து விழும் எச்சில் கூட என்மீது தான் விழவேண்டும் என்று எண்ணுவேன். அந்த அளவு எனக்கு தமிழ் மீது காதல் அல்ல வெறி ஏற்படும் அளவுக்கு என்னை உருவாக்கிய சிற்பி இல்லை இல்லை கடவுள்.

அப்பொழுது எல்லாம் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் பட்டிமன்றம் சென்னை தொலைகாட்சியில் ஒலி பரப்புவார்கள். அதை பார்க்கும் எனக்கு இப்படி நம்மாலும் பேச முடியுமா என்று நினைப்பது உண்டு.
பிறகு சன் டிவி- யில் நடை பெற்ற அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் .
அப்பொழுது அங்கு வந்த திரு. தமிழ் நெஞ்சன் என்ற பட்டிமன்ற பேச்சாளர் என்னை பட்டிமன்ற பேச அழைத்தார்.
எனக்கு முதல் மேடை திரு. நிலவரசன் என்பவர் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்.
சில நாட்கள் கழித்து திரு. தமிழ் நெஞ்சன் தலைமையில் நடை பெற்ற பட்டிமன்றங்களில் தொடர்ந்து பல ஆண்டுகள் பேசி வந்தேன்.
அப்பொழுது எல்லாம் என்வாழ்கையில் இறபதர்க்குள்ளாக ஒரே ஒரு நிகழ்ச்சியை திரு. சாலமன் பாப்பையா அல்லது திரு. திண்டுக்கல் I லியோணி அவர்களோடு செய்து விட வேண்டும் என்பது தான்.
இதற்கு இடையில் திரு. இலக்கிய சுடர். தா.ராமலிங்கம், திரு. மா. ராமலிங்கம், பேராசிரியர். பெரியார் தாசன், திரு. விழுப்புரம் செல்வராஜ், திரு. தேவகோட்டை ராமநாதன். திரு. ஈரோடு மகேஷ் போன்றோரோடு நிழச்சியில் பங்குகொண்டேன்
சன் டிவி அரட்டை அரங்கம் திரு. விசு அவர்களுடனும், திரு, T ராஜேந்தர் அவர்களுடனும்,
ராஜ் டிவி அகடவிகடம் திரு. வாணியம்பாடி அப்துல் காதர் அவர்களுடனும்
ஜெயா டிவி திருமதி விசாலி கண்ணதாசன் அவர்களுடனும்
மக்கள் டிவியில் தொடர் நிழ்ச்சியாக பழமொழி பஞ்சாயத்து 15 வாரங்கள் நடித்தது.
வின் டிவி, மெகா டிவி, பாலிமர் டிவி, ஜாக் டிவி
LIC, ONELINE.CC, MODICARE, ORIFLAME, AMWAY
போன்ற நிறுவங்களில் சுய முன்னேற்றம் குறித்த வகுப்புகளையும் தொடர்ந்து எடுத்து வந்தேன்.
என இப்படி டிவியிலும் பொது நிகழ்விலும் பங்கு கொண்டாலும்
என் கனவில் இருந்து மற்றும் லட்சியத்தில் இருந்து நான் என்னை மாற்றி கொள்ளவில்லை.
அதற்கும் ஒருநாள் விடிவு பிறந்தது. திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு மரியாதைக்குரிய திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் பட்டிமன்றத்தில் பேச நண்பர் திரு. விஜயகுமார் அவர்கள் அழைத்தார். அனால் என்னால் போகமுடியவில்லை
ஏனென்றால் இரண்டு நாட்கள் முன்னால் தான் இனி பேசக்கூடாது என்று முடிவு எடுத்தேன். ஏனென்றால் என்னால் வீட்டை கவனிக்க முடியவில்லை என்று. அதனால் என்னால் நிகழ்ச்சிக்கு போக மறுத்துவிட்டேன் (உதட்டளவில் )